கறி உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - கால்கிலோ

கொத்துக்கறி - 100 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை டீஸ்பூன்

கரம்மசாலா - கால்ஸ்பூன்

பட்டை - சிறிய துண்டு

வெங்காயம் - 1

தக்காளி - 1

மிளகாய் - 2

சில்லி பவுடர் - கால்ஸ்பூன்

மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்

எண்ணெய் நெய் - 3 டேபிள்ஸ்பூன்

மல்லி புதினா - கொஞ்சம்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

ரவையை நன்கு மணம் வருமாறு வறுத்துக்கொள்ளவும். கறியை கழுவி வடிகட்டிக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா கட் செய்து கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் நெய் விட்டு,பட்டை, வெங்காயம் தாளித்து, இஞ்சி பூண்டு, கரம்மசாலா, தக்காளி, மல்லி புதினா, உப்பு, சில்லிபவுடர், மஞ்சள் பொடி, கறி சேர்த்து தண்ணீர் தெளித்து 2-3 விசில் வைக்கவும்.

ஆவி அடங்கியதும் திறந்து ரவைக்கு இரு மடங்கு தண்ணீர் சேர்க்கவும். ஏனெனில் கறியில் நீர் நிற்கும். உப்பு சரி பார்க்கவும்.

கொதிவந்தவுடன் வறுத்த ரவையை போட்டு கட்டி பிடிக்காமல் கிளறவும். உப்புமா பதம் வந்தவுடன் இறக்கவும். சுவையும் மணமுமான கறி உப்புமா ரெடி.

குறிப்புகள்: