கருவாடு முட்டை மசாலா
தேவையான பொருட்கள்:
கருவாடு - 50 கிராம்
முட்டை - 2-3
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 2 பெரியது
மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
உப்பு - சிறிது
செய்முறை:
கருவாடை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தட்டிய பூண்டு, தக்காளி, மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சிறிது போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கிய பின்பு மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி விட்டு கருவாட்டை சேர்க்கவும். மூடி போட்டு 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
முட்டை உடைத்தும் அப்படியேவும் ஊற்றலாம் அல்லது முட்டையை கலக்கியும் விடலாம்.
முட்டை வெந்தபின்பு பிரட்டி விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான கருவாடு முட்டை மசாலா ரெடி. இதனை ப்ளைன் சாதம் ரசம் உடன் சாப்பிடலாம்.