கருவாடு கிரேவி
தேவையான பொருட்கள்:
கொடுவா கருவாடு - 2 துண்டு
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லீக்கீரை - ஒரு கைப்பிடி
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்பால் - 4 கரண்டி
எலுமிச்சைச்சாறு - 4 கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாய், மல்லிக்கீரை, கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கவும்.
கருவாட்டை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி அதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள் சீரகத்தூள் போட்டு பிரட்டி பத்து நிமிடம் வைக்கவும்.
பின் ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி கருவாட்டை போட்டு பொரிய விடவும்.
பொரிந்ததும் அதில் நறுக்கி வைத்த பொருள்களை போட்டு லேசாக வெந்ததும் அதில் தேங்காய்பால் எலுமிச்சைச்சாறு ஊற்றி எண்ணெய் விட்டு கிரேவி போல வந்ததும் சூடாக பரிமாறவும்.