கருப்பட்டி ஸ்டப் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப் 2 மணிநேரம் ஊற வைக்கவும்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கருப்பட்டி 100 கி
தேங்காய் துருவல் - 11/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும்,வெந்தயத்தையும் ஊறவைத்து தண்ணீர் சேர்க்காமல் கட்டியாக உப்பு போட்டு அரைத்து கொள்ளவும்.
கருப்பட்டியை சிறிய கோலி அளவு துண்டுகளாக உடைத்து வைத்துக்கொள்ளவும்.
தேங்காயை ஒரு தட்டில் பரத்தி வைத்து கொள்ளவும்.
அரைத்த மாவு உருட்டும் பதத்தில் கட்டியாக இருக்க வேண்டும். தண்ணீர் கூடிவிட்டால்கொஞ்சம் அரிசி மாவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
மாவில் ஒரு பெரிய எலுமிச்சம் பழம் அளவிற்க்கு உருண்டையாக உர்ட்டி, நடுவில் குழி போல செஇது ஒரு துண்டு கருப்பட்டியை வைத்து மாவை நல்ல உருண்டையாக மூடி விடவும். இந்த உருண்டையை தேங்காயில் நன்றாக உருட்ட வேண்டும். தேங்காய் துருவல் கொழுக்கட்டையில் அடர்த்தியாக ஒட்டி இருக்க வேண்டும்.
இது போல எல்லா கொழுக்கட்டைகளையும் செய்து வைத்துகொண்டு, இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து 20 நிமிடங்க்ளல் வேக வைத்து எடுத்து விடவும்.
எ