கத்திரிக்காய் மாங்காய் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
சீலா மீன் - ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - முக்கால் கிலோ
பச்சை மிளகாய் - ஆறு
வடு மாங்காய் - ஆறு
கத்திரிக்காய் - கால் கிலோ (சின்ன கத்திரிக்காய்)
மிளகாய் தூள் - நான்கு தேக்கரண்டி
தனியா தூள் - ஆறு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெள்ளை புளி - மூன்று எலுமிச்சை அளவு
தாளிக்க:
எண்ணெய் - கால் டம்ளர்
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பூண்டு - பத்து பல் (தட்டி கொள்ளவும்)
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
செய்முறை:
மீனை சுத்தம் செய்து வைக்கவேண்டும். தக்காளியை அரைத்து தனியாக வைக்க வேண்டும்.
புளியை கெட்டியாக கரைத்து வைக்க வேண்டும். ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்து அதில் எண்ணெயை ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, பூண்டு போட்டு நன்கு வதக்கி வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும்.
கறிவேப்பிலை, கத்திரிகாயை நான்காக நறுக்கி போட்டு மாங்காயையும், பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அரைத்த தக்காளியை ஊற்றவேண்டும்.
தக்காளி கொதித்ததும் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும். பிறகு கெட்டியாக கரைத்து வைத்திருக்கும் புளியை ஊற்றி சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பிறகு மீனை போட்டு கொத்தமல்லியையும் தூவி மீன் வெந்ததும் இறக்க வேண்டும்.