கத்திரிக்காய் ஆனம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - கால் கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

மல்லி, கறிவேப்பிலை - சிறிது

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் அல்லது வடிகஞ்சி - 1 டம்ளர்.

இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்

சில்லி பவுடர்- அரை ஸ்பூன்

மல்லி பொடி - ஒன்றரை ஸ்பூன்

சீரகப்பொடி - அரை ஸ்பூன்

மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்

பெருஞ்சீரகப்பொடி - கால் ஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு.

எண்ணெய் - 3 டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - கால் ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 1

உப்பு - தேவைக்கு

செய்முறை:

கத்திரிக்காயை நீளமாக கட் செய்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், மல்லி இலை கட் செய்து கொள்ளவும். புளி கரைத்துக்கொள்ளவும்.

குக்கரில் கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், மிளகாய், புளிக்கரைசல், மசாலாப்பொடி, இஞ்சிபூண்டு, மல்லி இலை, உப்பு போட்டு மூடி 2 விசில் வைக்கவும்.

கத்திரிக்காய் வெந்தவுடன் 1 டேபிள்ஸ்பூன் அரிமாவு கரைத்து ஊற்றி கொதிக்கவைக்கவும். உப்பு, புளி நன்றாக இருக்க வேண்டும். ஆணம் தேவையான அளவுக்கு தண்ணீரோ வடித்த கஞ்சியோ சேர்த்து கொள்ளலாம்.

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், மிளகாய்வற்றல் கிள்ளி போட்டு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து சிவக்க வதக்கி ஆணத்தில் கொட்டவும்,

சுவையான கத்திரிக்காய் ஆணம் ரெடி. இதை மட்டன், பீஃப், சிக்கன் சமைக்கும் போது ரசத்திற்கு பதில் இந்த ஆணம் விட்டு சாப்பிடலாம்.

குறிப்புகள்: