கதம்ப போண்டா
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 100 கிராம்
கடலைமாவு - 150 கிராம்
கேரட் - இரண்டு
உருளைக்கிழங்கு - ஒன்று
வேகவைத்த பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
முட்டை - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒருடேபிள்ஸ்பூன்
சோடா உப்பு - ஒரு கரண்டி
உப்பு - ஒரு கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்
மாவுடன் மிளகாய்தூள், பெருங்காயத்தூள், சோடா உப்பு, இஞ்சி பூண்டு விழுது, முட்டை, உப்பு போட்டு கட்டியில்லாமல் கலக்கி அரைமணி நேரம் வைக்கவும்.
பின் அதில் நறுக்கி வைத்த காய்களை போட்டு கலக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து அதில் ஊற்றி சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சூடாக பரிமாறவும். இதே போல் எல்லாவற்றையும் பொரித்தெடுக்கவும்..