கதம்ப துவையல்
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - அரை கப்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் - 8
கறிவேப்பிலை - 2 கொத்து
வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
செய்முறை:
சின்ன வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல் போட்டு 30 நொடி வறுக்கவும். அதில் பூண்டு போட்டு வதக்கி 30 விநாடிகள் வேகவிடவும்.
பின்னர் வெள்ளை எள்ளைப் போட்டு ஒருமுறை பிரட்டி விடவும்.
உடனே தேங்காய் துருவலை போட்டு 2 நிமிடம் வறுக்கவும். தேங்காய் வாசனை வரும் வரை வதக்கி ஆற வைக்கவும்.
ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அதனுடன் வெங்காயம், புதினா, மல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, புளி போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
நன்கு துவையல் பதத்திற்கு அரைபட்டவுடன், எடுத்து விடவும்.
இந்த கதம்ப துவையலை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். மிகவும் சுவையானது.
குறிப்புகள்:
நோன்பு கஞ்சியுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.