கடாய் பிரான்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஊற வைக்க:

ப்ரான் - அரை கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - இரண்டு தேக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - ஐம்பது மில்லி

ரம்பை இலை - மூன்று

முழு கொத்தமல்லி - இரண்டு தேக்கரண்டி (பொடித்தது)

இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - இரண்டு (பொடியாக நறுக்கியது)

தக்காளி - இரண்டு (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

இறாலை நல்ல கழுவி சுத்தம் செய்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை எடுத்து கழுவி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, உப்பு போட்டு பதினைந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு எண்ணெயை காய வைத்து ரம்பை இலை, திரித்த கொத்தமல்லி, இஞ்சி போட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

பிறகு காஷ்மீர் மிளகாய் தூள், உப்பு தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு நல்லா வதக்கி தக்காளியை போட்டு நன்கு வதக்கி சிறிது நேரம் சிம்மில் வைக்க வேண்டும்.

பிறகு ஊற வைத்துள்ள இறாலையும் சேர்த்து நல்லா ஐந்து நிமிடம் வதக்கி சிறிது நேரம் வேக விட்டு நன்கு சுருள கிளறி எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கவும்

குறிப்புகள்: