கடாய் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - ஒரு கிலோ

நெய் - 4 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்

மல்லி இலை - சிறிது

கரம் மசாலா - 2 ஸ்பூன்

தக்காளி - 4

வெந்தயம் - 1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

உப்பு - சுவைக்கேற்ப

கொத்தமல்லி விதை - 2 ஸ்பூன்

சிகப்பு மிளகாய் - 3

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தக்காளி, மல்லி இலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்

கொத்தமல்லியையும், சிகப்பு மிளகாயையும் நன்றாக இடித்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பிறகு மல்லி, சிகப்பு மிளகாய் கலவையை சேர்க்கவும்.

ஒரிரு நிமிடம் வதக்கிவிட்டு, தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.

பிறகு ஒரு கொதி வந்ததும் பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

பின்பு கோழி துண்டுகளை சேர்த்து எண்ணெய் கசியும் வரை வேக விடவும்.

கோழி நன்கு வெந்ததும் கரம் மசாலா, வெந்தயம் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: