ஓட்ஸ் கஞ்சி (குழந்தைகளுக்கு)
0
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - இரண்டு தேக்கரண்டி
பாதாம் பவுடர் - அரை தேக்கரண்டி
பால் - அரை டம்ளர்
தண்ணீர் - ஒரு டம்ளர்
ப்ளையின் குளுக்கோஸ் - மூன்று தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
தண்ணீரில் பால், பாதாம் பவுடர், உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு அடுப்பில் வைத்து கை விடாமல் காய்ச்சி அதில் பால், குளுக்கோஸ் சேர்த்து கொடுக்கவும்