எலும்பு சூப் (பிள்ளை பெற்றவர்களுக்கு)
தேவையான பொருட்கள்:
எலும்பில் வேக வைக்க வேண்டியது:
கறி உடைய மார்கண்டம் எலும்பு - ஆறு துண்டு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் பால் - கால் டம்ளர்
தாளிக்க:
நெய் - இரண்டு தேக்கரண்டி
கரம் மாசாலா தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயம் - கால் பாகம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
எலும்பை கழுவி சுத்தம் செய்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
நெய்யில் தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து சூப்பில் கலக்கவும்.
இது பிள்ளை பெற்றவர்களுக்கு செய்யும் சூப்பாகும். உடல் இளகி தெம்பில்லாமல் இருக்கும்.
நாற்பது நாட்களுக்கு இந்த சூப்பை டெய்லி செய்து மதிய உணவின் போது அவித்த முட்டையுடன் சாப்பிடவும்.