எலும்புச்சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100 - 150 கிராம்
நெஞ்சஎலும்பு - 200 கிராம்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
விருப்பமான காய்கறிகள் - கால் கிலோ
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம்- 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிது
செய்முறை:
எலும்பை உப்பு போட்டு வேக வைக்கவும். பருப்பை மஞ்சள், பூண்டு சேர்த்து வேக வைக்கவும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து வைக்கவும்.
கட் செய்த காய்கறிகள், வெங்காயம், மிளகாய், சாம்பார் பொடி, உப்பு, தக்காளி, புளிக்கரைசல் சேர்த்து வேக வைக்கவும். இதனுடன் வேகவைத்த எலும்பு, பருப்பு எல்லாம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். மல்லி இலை தூவவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறிது வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
சுவையான எலும்பு சாம்பார் ரெடி.