எண்ணெய் கத்திரிக்காய் பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1/4 கிலோ

வெங்காயம் - ஒன்று

அரைத்த இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி

இஞ்சி - ஒரு சிறியதுண்டு

பூண்டு - 5 பல்

வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1 டேபிள்ஸ்பூன்

பச்சைமிளகாய் - 2

புளி - எலுமிச்சைப்பழ அளவு

முழுமிளகு - 1 டேபிள்ஸ்பூன்

மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

மிளகாய்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - ஒரு மூடி

எண்ணெய் - 100 மில்லி

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காயை நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும் இஞ்சி பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை போட்டு பொரித்து எடுக்கவும். பின் அதே சட்டியில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், தூள் வகைகள் எல்லாவற்றையும் போட்டு தாளிக்கவும்.

அதில் பொரித்து வைத்த கத்தரிக்காயையும் போட்டு புளியை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

பின் எல்லாம் வெந்து மேலே எண்ணெய் திரண்டு வருகையில் தேங்காய்ப் பாலை ஊற்றி கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்: