உளுந்து சோறு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முழு உளுந்து - 1 கப் ( தோல் நீக்கியது)

புழுங்கல் அரிசி 1/2 கப்

தேங்காய் பால் + தண்ணீர் சேர்த்து - 3 1/2 கப்

இஞ்சி,பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

வெண்ணெய் - 50 கி

பட்டை. - ஒரு சிறிய துண்டு

கிரம்பு - 3 ஏலக்காய் - 3

உப்பு - ருசிக்கேற்ப்ப

கறிவேப்பிலை சின்ன வெங்காயம் - 10 பொடியாக அரிந்தது

செய்முறை:

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு கூடவே ஒரு ஸ்பூன் எண்ணெயும் ஊற்றவும்.

பட்டை,கிராம்பு,ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.

இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி கறிவேப்பிலை சேர்த்து தே.பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும்

பாலில் லேசாக நுரை வந்ததும், கழுவி வைத்துள்ள அரிசி, உளுந்தையும் உப்பையும் போட்டு சட்டியை மூடி விடவும்.

இடையில் ஒரு முறை திறந்து கிளறி விடவும். இருபது நிமிடம் கழிந்து இறக்கி விடவும்.

மட்டன், சிக்கன் குழம்புடன் சாபிட நன்றாக இருக்கும்

குறிப்புகள்: