உருளைக்கிழங்கு மாசி வதக்கல்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - கால் கிலோ
மாசி பொடித்தது - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2-4
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் பொடியாக நறுக்கி, மிளகாயை கீறிக்கொள்ளவும்.
ஒரு சிறிய மாசித்துண்டோடு பொரித்த அல்லது சுட்ட மிளகாய்வற்றல், உப்பு சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.
ஒரு நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது. அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். நன்கு வதங்கிய பின்பு தூள் செய்த மாசியை சேர்த்து வதக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு மாசி வதக்கல் ரெடி. இது ரசம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.