உருளைக்கிழங்கு, கருவாடு ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வஞ்சிரம் கருவாடு - 2 துண்டுகள்

வெங்காயம் - 2

தக்காளி - 2

மிளகாய்

கறிவேப்பிலை - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

மிளகாய்தூள் - ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

சீரக தூள் - 1/2 ஸ்பூன்

எண்ணெய் - 2 ஸ்பூன்

உருளைக்கிழங்கு

உப்பு - 1/4 ஸ்பூன் (தேவைப்பட்டால்)

செய்முறை:

உருளைக்கிழங்கை நீளத்துண்டுகளாய் நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, மிளகாய் நீளத்துண்டுகளாய் நறுக்கவும்.

கருவாட்டை நன்கு கழுவிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயத்தை சேர்க்கவும்.

வெங்காயம், மிளகாய் பொன்னிறமானதும் தக்காளி, கருவாட்டை சேர்த்து கிளறவும்.

கருவாடு பச்சைவாடை போக வதக்கவும்.

பின் அதில் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

மிளகாய் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து பிரட்டவும்.

சிறிது நேரம் மூடி வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

குறிப்புகள்: