உருண்டைகளியா சால்னா (குஃப்தா சால்னா)
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி (எலும்பு நீக்கியது) - அரை கிலோ
எலும்புபோடு உள்ள கறி - கால் கிலோ
தேங்காய் (அரைத்தது) - ஒரு சிறிய கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
மல்லிக்கீரை - ஒரு கட்டு
மசாலாத்தூள் - ஒரு ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் எலும்பு நீக்கிய கறியை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பாதி மல்லிக்கீரை, அரைத்த தேங்காய், மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.
எலும்புடன் உள்ள கறியை (வழக்கம்போல்) சால்னா செய்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெந்தவுடன் உருண்டைகளை போட்டு மீண்டும் வேக வைக்கவேண்டும். வெந்தவுடன் மீதி மல்லிக்கீரையை நறுக்கி போட்டு இறக்கி விடலாம்.