உப்பு கண்டம் கறி (குர்பாணி கறி)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துண்டு கறி - ஒரு கிலோ

உப்பு - இரண்டு மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - நான்கு மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை:

கறி துண்டாக தடிமானாக போடாமல் சிறிது சப்பையாக போடனும் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு சுத்தமான சணல் கயிறை கழுவி, சுத்தாமான பெரிய கோணி ஊசியில் ஒவ்வொரு கறியாக கோர்த்து வெயிலில் மாலை மாதிரி தொங்க விட்டு வைக்க வேண்டும்.

காய வைக்கும் போது கூடவே ஒரு கருப்பு துணி வைப்பார்கள் அது காக்கா வரமால் இருக்க.

இப்போது நல்ல பத்து பதினைந்து நாள் காய்ந்த கறியை வீட்டிலும் உபயோகப்படுத்துவார்கள். வெளி ஊருக்கும் கொண்டு செல்வார்கள்.

இது பொரிக்கும் போது அந்த கறியை ஒரு பேப்பரில் வைத்து நல்ல பஜ்ஜி மாதிரி தட்டி பிறகு கொஞ்சமாக எண்ணெய் வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.

தொட்டுக்க ஒன்றும் இல்லாத போது, திடீர் சமையலுக்கு இது மிகவும் கை கொடுக்கும்.

அதை தட்டி பொரிப்பதால் தட்டி பொரித்த கறி என்று பெயர்.

குறிப்புகள்: