உடனடி உப்புகண்டம்
0
தேவையான பொருட்கள்:
பீப் கறி -1 கிலோ
நீள பட்ட மிளகாய் -15
இஞ்சி,பூடு விழுது - 50 கிராம்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு -தேவைக்கு
எண்ணெய் - 3 மேசைகரண்டி
செய்முறை:
பீப் கறியை நடுத்தர அளவாக வெட்டி சுத்தம் செய்யவும்.
குக்கரில் கறி,பட்ட மிளகாய்,இஞ்சி பூடு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 8 முதல் 10 விசில் வரை வைத்து அவிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின்னர் கறிகலவையை கொட்டி வதக்கவும்.
1 கிலோ கறி 1/2 கிலோ ஆக சுருளும் வரை அடுப்பில் இருக்க வேண்டும்.
நன்கு சுருண்டு மொருக வந்த பின் இறக்கவும்.
இது உப்புகண்டம் சுவையில் இருக்கும்.