ஈஸி மட்டன் ப்ரை
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத ஆட்டிறைச்சி - 300கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
இறைச்சியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி இறைச்சி அளவுக்கு சிறு துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
இறைச்சியுடம் கால் கப் தண்ணீர் சேர்த்து தனியே வேக விடவும். கூடவே உப்பு சேர்க்கவும்.
கறி சற்று வெந்தவுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டங்களையும் சேர்த்து வேகவிடவும்.
கறியின் நிறம் மாறி அரை அவியலாக இருக்கும்போதே மிளகாய் தூளையும் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் நன்கு கிளறிவிட்டு வேகவிடவும்.
நீர் வற்றிக்கொண்டு வரும்பொழுது எண்ணெய் சேர்த்து கிளறவும்.
பின்னர் நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்.
அடுப்பை ஸிம்மில் வைத்து சிறிது நேரம் வேகவிடவும்.
நீர் சத்து எதுவுமில்லாமல் கறியில் எண்ணெய் பிரிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
குறிப்புகள்:
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த மட்டன் ப்ரை சாதம், சப்பாத்தி, இடியாப்பம் அனைத்துக்கும் பொருத்தமானது. பயணங்களின்போது எடுத்துச் சென்றால் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.