ஈஸி மட்டன் ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - ஒரு கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - மூன்று கரண்டி
மிளகாய்தூள் - இரண்டு கரண்டி
கரம் மசாலாத்தூள் - இரண்டு கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கறியை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
கறியுடன் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் மூன்று விசில் விட்டு வேகவிட்டு தண்ணீரை வற்ற விடவும்.
வேறு சட்டியில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளியை வதக்கி மிளகாய்தூள், தயிர் ஊற்றி கலக்கி வேகவைத்த கறியைப்போட்டு கிளறி பொரியவிட்டு எண்ணெய் திரண்டால் போல் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.