ஈஸி பால் கோவா
0
தேவையான பொருட்கள்:
மில்க் மெய்டு - 1 டின் ( 500 கி )
தயிர் - 125 கி
பால் - 150 மி.லி
நெய் - 100 கி
செய்முறை:
ஒரு non-stick சட்டியில் மில்க் மெய்டெய்யும்,தயிரையும் போட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.
அதனுடன் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
ஒரு மரக் கரண்டியால் கை விடாமல் கிண்டவும்.
முதலில் கொஞ்சம் தண்ணியாக இருக்கும்.
பிறகு,கொஞ்சம் thick -ஆனவுடன் பாதி நெய்யை ஊற்றி கிண்டவும்.
பால் கோவா பதம் வரும் முன்பு மீதி நெய்யை கொஞ்சம்,கொஞ்சமாக ஊற்றி கை விடாமல் கிண்டவும்.
பால் கோவா நெய்யை கக்கும் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.