ஈச்சங்கொட்டை பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - ஒரு கிலோ

தேங்காய் - ஒரு மூடி

முட்டை - 2

கரூர் நெய் (அல்லது) டால்டா - 100 கிராம்

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து முதல் பால் எடுத்துக் கொள்ளவும். திரும்பவும் மிக்ஸியில் அரைத்து ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து 2-ம் பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முதல் பால், முட்டை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சலித்து வைத்துக் கொண்டு நெய்யை உருக்கி மாவில் ஊற்றவும்.

நெய்யை மாவில் ஊற்றியவுடன் ஒரு கரண்டியால் நன்கு ஆறும் வரை அனைத்து மாவிலும் படும்படி கலக்கவும்

மாவு ஆறியவுடன் கலக்கி வைத்து இருக்கும் பாலையும் முட்டையும் அதில் ஊற்றி நன்கு பிசையவும்

பிறகு 2-ம் பாலையும் ஊற்றி தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். (மாவு கையில் ஒட்டாதவாறு பிசையவும்)

மாவை நன்கு பிசைந்தவுடன் மாவை கையால் கால் இன்ச் அளவிற்கு தட்டிக் கொள்ளவும்.

சிறு அச்சுகளால் தட்டிய மாவை வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான ஈச்சங்கொட்டை பணியாரம் தயார்.

குறிப்புகள்: