ஈசி மட்டன் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறி - 1/4 கிலோ

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

மிளகுத்தூள் - 2 ஸ்பூன்

சீரகத்தூள் - 1 ஸ்பூன்

தனியாத்தூள்- 1 ஸ்பூன்

கரம் மசாலா- 1 ஸ்பூன்

தயிர் - 3 ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை:

கறியை நன்றாக கழுவவும்

அதில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத் தூள், கரம் மசாலா, தயிர், இஞ்சி பூண்டு விழுது போட்டு கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 வீசில் குக்கரில் வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின்பு வேக வைத்த கறியை சேர்த்து வதக்கவும். சிம்மில் வைத்து பொரியவிடவும்.

எண்ணெய் கசிந்து வரும்போது சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: