இறைச்சிவடை
தேவையான பொருட்கள்:
ஆட்டு இறைச்சி(அ)மாட்டு இறைச்சி அரைத்தது - 400 கிராம்
இஞ்சி, பூண்டுவிழுது - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
நாட்டு வெங்காயம் - 50 கிராம்
அரைத்த தேங்காய் விழுது - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மல்லி இலை அரிந்தது - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாப்பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகாய்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
இனிப்பில்லாத ப்ரெட் துண்டு - ஒன்று
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
சமையல் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரைத்த இறைச்சியுடன் ப்ரெட் துண்டைப்போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
மேலும் அதில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது மசாலா பவுடர், அரிந்த வெங்காயம், பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, உப்பு அனைத்தையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்,
மேலும் அதில் அரைத்த தேங்காய் விழுது, சோள மாவு, முட்டை ஆகிய பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
பிறகு ஒரு நாண் ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் இறைச்சிக்கலவையை பருப்பு வடைப்போல் தட்டி போடவும்.
இனி மிதமான தீயில் வெந்ததும் திருப்பி போட்டு சிவந்த பின்பு எடுத்து சூடாக பரிமாறவும்.