இறால் வெண்டைக்காய் ஸ்பைஸி மசாலா
தேவையான பொருட்கள்:
இறால் - அரை கிலோ
வெண்டைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு (அரைத்து கொள்ளவும்)
பச்சை மிளகாய் - இரண்டு (பொடியாக நறுக்கவும்)
மிளகாய் தூள் - இரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரக தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரன்டி
உப்பு - இரண்டு தேக்கரண்டி
புளி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் + பட்டர் - நான்கு தேக்கரண்டி
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை எடுத்து விட்டு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
வெண்டைக்காயை கழுவி ஒரு பெரிய கண் தட்டில் தண்ணீரை வடிய விட்டு அதை மூன்றாக நறுக்கி வைக்க வேண்டும்.
இப்போது ஒரு பெரிய வாயகன்ற வாணலியில் எண்ணெய் + பட்டரை ஊற்றி அரைத்த வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும். இறாலை போட்டு அனைத்து மசாலாக்களையும் (மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு, பச்சை மிளகாய், கரம் மசாலா தூள்) சேர்த்து இரண்டு நிமிடம் வேக விட்டு பிறகு வெண்டைக்காயையும், புளி பேஸ்டையும் சேர்த்து நன்கு வதக்கி சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்க வேண்டும்.