இறால் வடை
தேவையான பொருட்கள்:
பெரிய இறால் - ஆறு
பச்சை மிளகாய் - இரண்டு
உப்பு - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - ஒரு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - இரண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 1/2 ஸ்பூன்
செய்முறை:
இறாலை தோலை உரித்து சுத்தம் செய்து முதுகிலும், வயிற்றிலும் உள்ள அழுக்கை நீட்டாக கத்தியால் கீறி எடுக்கவும்.
அதில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு போட்டு பிரட்டவும்.
பிறகு அரை தேக்கரண்டி ஆயில் ஊற்றி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி போட்டு தேங்காய் துருவல் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி கடைசியில் கொத்தமல்லி தழையும் சேர்த்து வதக்கி ஆற விடவும்.
மிக்ஸியில் முதலில் பொட்டுக்கடலையை போட்டு பொடித்து தனியாக வைக்கவும்.
பிறகு ஆறிய இறாலை போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும், அத்துடன் பொட்டுக்கடலை பொடியையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பிறகு ப்ரிட்ஜில் வைத்து கெட்டியானதும் எடுத்து நாண் ஸ்டிக் தவாவில் மூன்று ஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிய எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து வடைகளாக தட்டி பொரிக்கவும்.
நல்ல இரண்டு பக்கமும் வெந்து பிரவுனானதும் எடுக்கவும். சுவையான இறால் வடை ரெடி