இறால் மக்ரோனி
தேவையான பொருட்கள்:
மக்ரோனி - 400 கிராம் பாக்கெட்
இறால் - அரை கிலோ
எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி
பட்டை,ஏலக்காய்,லவங்கம் - தலா இரண்டு
வெங்காயம் - நான்கு
தக்காளி - ஐந்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - ஒரு கப்
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து தனியாக வைக்கவும்.
ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து பட்டை,லவங்கம்,ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம்,இஞ்சி பூண்டு,கொத்தமல்லி தழை,புதினா தழை போட்டு வதக்கவும். வதங்கியதும் அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், மசாலா வகைகள், உப்பு போட்டு கிளறி சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலையும் போட்டு வதக்கவும். ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக வைத்து தனியாக வைக்கவேண்டும்.
குக்கரில் மக்ரோனியை போட்டு ஒரு கப் அளவிற்கு இரண்டு கப் வீதம் 400 கிராம் என்பது நான்கு டம்ளர் இருக்கும். அதில் எட்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நான்கு விசில் விடவும். ஆவி அடங்கியதும் திறந்து மக்ரோனி வெந்ததும் அதில் இறாலை போட்டு தேங்காய் பாலையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு மல்லி தழை தூவி இறக்க வேண்டும்.