இறால் டிக்கா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய இறால் - 1/4 கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 1

மஞ்சள்த்தூள் - 1ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்

தனியாத்தூள் - 1/2ஸ்பூன்

சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்

கரம் மசாலா - 1/2ஸ்பூன்

சோளமாவு - 2ஸ்பூன்

முட்டை - 1(வெள்ளை கரு மட்டும்)

உப்பு, எண்ணெய் -தேவைக்கு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு, மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் , கரம் மசாலா, சோளமாவு, உப்பு , முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும். இதோடு இறாலை சேர்த்து கிளறி 15 நிமிடம் வைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை பொரித்து எடுக்கவும்.

மேலே வெங்காயம், கொ.மல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: