இறால் சேமியா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 300 கிராம்

இறால் - பத்து

வெங்காயம் - இரண்டு

தக்காளி - இரண்டு

பச்சை மிளகாய் - ஒன்று

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு பின்ச்

தனியாத் தூள் - கால் தேக்கரண்டி

கொத்தமல்லி - இரண்டு மேசைக்கரண்டி

புதினா - ஒரு மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய் - 5 தேக்கரண்டி

டால்டா (அ) பட்டர் இரண்டு மேசைக்கரண்டி

கேரட் - ஒன்று

பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று

செய்முறை:

சேமியாவை ஒரு மேசைக்கரண்டி டால்டா போட்டு சிவக்க வறுத்து ஆற வைக்க வேண்டும்.

இறாலை சுத்தம் செய்து முதுகிலும் வயிற்றிலும் நேராக கத்தி வைத்து கீறி அந்த அழுக்கை எடுத்து அதில் மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.

சட்டியை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.

பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கி, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் போட்டு வதக்கி கேரட்டை நீளவாக்கில் இரண்டாக நறுக்கி அதை அரை வட்ட வடிவமாக முழுவதும் நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.

பிறகு தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, போட்டு நன்கு வதக்கி பத்து நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.

பிறகு இறாலை போட்டு நன்கு கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.

இப்போது சேமியா ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு சேமியவை போட்டு அடி பிடிக்காமல் கிளறி கொஞ்சமாக இருக்கும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும். அந்த சூட்டிலேயே இறக்கி தம் ஆகிவிடும்.

புதினா சட்னி, நார்த்தங்காய் ஊறுகாய், இஞ்சி டீயும் தொட்டுக் கொள்ள நல்லா இருக்கும்

குறிப்புகள்: