இறால் ஊறுகாய் (1)
தேவையான பொருட்கள்:
சின்ன இறால் - 500 கிராம்
எண்ணெய் - 150 மில்லி
வினிகர் - 1/2 கப்
வறுத்து பொடி செய்ய:
கடுகு - ஒரு கரண்டி + ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு கரண்டி
மிளகு - ஒரு கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு கரண்டி
வெந்தயம் - ஒரு கரண்டி
காய்ந்த மிளகாய் - நான்கு
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
பொரிக்க:
மிளகாய்தூள் - கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து பொரிக்க சொல்லியுள்ள தூள்களை சேர்த்து பிரட்டி தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு பொரித்துக் கொள்ளவும்.
ஒரு சட்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து பொடிக்க சொல்லியுள்ள பொருள்களை ஒவ்வொன்றாக வறுத்து ஆறவிட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
ஒரு சட்டியில் மீதி எண்ணெயை ஊற்றி ஒரு டேபிள்ஸ்பூன் கடுகை போட்டு தாளித்து வறுத்து பொடித்த பொடியை போட்டு கிளறி இறாலை போட்டு வினிகரையும் ஊற்றி கிளறி ஒரு கொதி வந்ததும் ஆறவிட்டு பாட்டிலில் போட்டு உபயோகிக்கவும்.