இறால் உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - கால் கிலோ

இறால் - கால் கிலோ

வெங்காயம் - இரண்டு பெரியது

தக்காளி - இரண்டு பெரியது

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி

கேரட் - ஒன்று பெரியது

கொத்தமல்லி தழை - கொஞ்சம்

பச்சைமிளகாய் - இரண்டு

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

எண்ணெய் - ஆறு தேக்கரண்டி

நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

இறாலை சுத்தபடுத்தி முதுகிலும்,வயிற்றிலும் உள்ள அழுக்கை எடுத்து கழுவவும்.

இறாலை கழுவி மஞ்சள்தூள் போட்டு பிரட்டவும்.

ரவையை கருகாமல் வறுத்து ஆறவைக்கவும் .

சட்டியை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தையும் கேரட்டை வட்டவடிவமாக அரிந்து அதையும் சேர்த்து வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வதக்கி மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும் வெந்ததும் இறாலை சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடம் விடவும்.

ரவை ஒரு கப்புக்கு ஒன்றரை பங்கு வீதம் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் ரவையை கொட்டி தீயை குறைத்து நெய் சேர்த்து கட்டிப்பிடிக்காமல் கிளறி இறக்கவும்.

அருமையான இறால் உப்புமா ரெடி.

குறிப்புகள்: