இறால் ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
இறால் - கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரன்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - கொஞ்சம்
தக்காளி - ஒன்று
பட்டை - ஒரு சிறிய துண்டு
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து அதில் பட்டை, தக்காளியை தவிர மற்ற எல்லா பொருட்களையும் போட்டு பிசறி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி நல்ல காய்ந்ததும் பட்டை போட்டு பிசறி வைத்துள்ள இறாலை போட்டு நல்ல வதக்கி பாதி வதங்கும் போது தக்காளியை மீடியமாக நறுக்கி சேர்த்து மேலும் வதக்கி தண்ணீர் வற்றி பொன்னிறமானதும் இறக்கி பரிமாறவும்.