இனிப்பு மக்ரோனி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மக்ரோனி-1 கப்(வேகவைத்தது)

தேங்காய் பால்-3 கப்

சீனி- 1 கப் (அல்லது தேவைக்கு தகுந்தபடி)

உப்பு-தேவைக்கு

நெய்-3 மேசைகரண்டி

முந்திரி-10

கிஸ்மிஸ்-5

ஏலக்காய்-3

பட்டை-1

செய்முறை:

மக்ரோனியை வேகவைத்து எடுக்கவும். தேங்காய் பால் தயாராக எடுத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் நெய் ஊற்றி ஏலக்காய்,பட்டை தாளிக்கவும்

பின் அதில் முந்திரி,கிஸ்மிஸ் போடவும்.

பொன்னிறமானதும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின் மக்ரோனியை சேர்த்து சிறுதீயில் வைக்கவும்.

அதன் பின் சீனியும், உப்பும் சேர்த்து 10 நிமிடம் கழிந்ததும் இறக்கி பரிமாறலாம்.

குறிப்புகள்: