இனிப்பு பச்சடி
0
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/4 கிலோ
அன்னாசிப்பழம் - அரைபகுதி
சீனி - ஒரு டம்ளர்
முந்திரிபருப்பு - 10
நெய் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து மேல்தோலை நீக்கி வைக்கவும்.
அன்னாசிபழத்தை பொடியாக நறுக்கி தக்காளியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தண்ணீர் சேர்க்ககூடாது.
பின்பு அதை ஒரு வாணலியில் போட்டு நன்கு கிளறவும்.
இதனுடன் ஒரு டம்ளர் சீனி சேர்த்துக் கிளறவும்.
நன்றாக அல்வா போல் கெட்டியானதும் ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரிபருப்பை வறுத்துப்போடவும்.
இது எங்கள் ஊரில் கல்யாண வீடுகளில் பிரியாணியுடன் பரிமாறப்படும்.