இனிப்பு தேங்காய் சேமியா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - ஒரு கப்

பால் - இரண்டு கப்

பாதாம் - 5

முந்திரி - மூன்று

தேங்காய் - இரண்டு பத்தை

சர்க்கரை - அரை கப்

கண்டென்ஸ்ட் மில்க் - மூன்று மேசைக்கரண்டி

ஏலக்காய் - இரண்டு

தாளிக்க:

நெய் - இரண்டு தேக்கரண்டி

முந்திரி - மூன்று

செய்முறை:

பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோலெடுத்து அத்துடன் முந்திரி, தேங்காய் சேர்த்து ஒரு முறை மிக்ஸியில் தூளாக்கி விட்டு தேங்காய் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.

பாலில் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பிக்கும் போது சேமியா மற்றும் அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி, சர்க்கரையும் சேர்த்து கலந்து மேலும் கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் சேமியா வேக ஐந்து நிமிடம் போதுமானது.

முந்திரியை பொடி பொடியாக அரிந்து நெய்யில் பொன்முறுவலாக வறுத்து சேமியாவில் சேர்க்கவும்.

அடுப்பை அணணத்து விட்டு ஐந்து நிமிடம் அப்படியே விடவும்.

சேமியாக கெட்டியாகி நல்ல திக்காக இருக்கும்.

அப்படியே ஒரு பவுளில் அள்ளி வைத்து குழந்தைகளுக்கு ஊட்டி விடவும்.

குறிப்புகள்: