இனிப்பு சுத்திரியான்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுத்த மாவு - ஒரு கப்

வெல்லம் - ஒரு கப்

ஏலம் - இரண்டு

உப்பு - இரண்டு பின்ச்

தேங்காய் துருவல் - கால் கப்

தண்ணீர் - ஆறு கப்

நெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு ஒரு பின்ச் உப்பு போட்டு ஒரு கையால் மாவை போட்டுக் கொண்டே மறு கையால் ஒரு கட்டை கரண்டி வைத்து கிளற வேண்டும்.கிளறி ஒரு ஈர துணியில் சுற்றி வைத்துவிடுங்கள்.

இன்னும் ஒரு கப் தண்ணீர கொதிக்கவிட்டு அதில் வெல்லத்தை பொடி செய்து போட்டு வெல்லம் கரைந்ததும் வடி கட்டி இன்னும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பின்ச் உப்பு, ஏலம் தட்டி போட்டு கொதிக்க விடவேண்டும்.

கொதிப்பதற்குள் ஈர துணியில் உள்ள மாவை எடுத்து உள்ளங்கையில் சிறிது நெய் தடவி சிறிய அளவு நெல்லிக்காய் சைஸ் உருண்டையை உருட்டி உள்ளங்கையில் ஒரு விரல் கொண்டு அழுத்த வேண்டும். இப்படியே எல்லாவற்றையும் செய்து கொதிக்கும் வெல்லம் தண்ணீரில் ஒவ்வொன்றாக போடவேண்டும். போட்டு உடனே கிளற கூடாது இரண்டு மூன்று கொதி வந்ததும் லேசாக கிளறி விட வேண்டும்.

ஒரு பத்து நிமிடத்தில் வெந்து விடும். கடைசியில் தேங்காய் துருவலை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதில் ஊற்றி ஒரு கிளறு கிளறி மீண்டும் ஒரு முறை கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்புகள்: