இட்லி பொடி (குழந்தைகளுக்கு)
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு மேசைக்கரண்டி (வறுத்தது)
வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி (வறுத்தது)
கறிவேப்பிலை - கால் கப்
உப்பு - அரை தேக்கரண்டி (அ) தேவையான அளவு
பூண்டு - ஒன்று
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியாக வறுக்கவும்.
வறுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் திரித்து ஒரு ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைக்கவும்.
இட்லியை பொடியாக நறுக்கி இந்த பொடியை தூவி நெய்யை சூடு பண்ணி ஊற்றி கிளறி கொடுக்கவும்.
உப்பையும் வறுக்கனும். இல்லை எல்லா பொருளையும் வறுத்து விட்டு அந்த சூட்டில் வாணலியில் கடைசியாக போட்டாலும் சரி.