இட்லி, தோசை, ஆப்பம் (த்ரி இன் ஒன்)
0
தேவையான பொருட்கள்:
புழுங்கள் அரிசி - ஒன்றரை டம்ளர்
பச்ச அரிசி - இரண்டரை டம்ளர்
உளுந்து - 1 1/4 டம்ளர்
ஜவ்வரிசி - இரண்டு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரன்டி
மீதியான சாதம் - 2 தேக்கரன்டி
செய்முறை:
அரிசி, ஜவ்வரிசி போட்டு ஊற வைக்கவும். உளுந்தில் வெந்தயத்தை போடவும்.
நைட் ஊற வைத்து காலையில் அரைத்து மாலை வரை புளிக்க வைக்கவும்.
அரைக்கும் போது அரிசி, மீதியான சாதத்தையும் சேர்த்து ஐஸ் வாட்டர் ஊற்றி அரையுங்கள்.
மொத்தமாக உப்பு போட்டு கலக்க வேண்டாம்.
பொங்கியதும் நல்ல கலக்கி ப்ரிட்ஜில் வைத்து தேவைக்கு எடுத்து உபயோகப்படுத்தவும்.