இடியாப்ப கொத்து கறி பிரியாணி
தேவையான பொருட்கள்:
இடியப்பம் - பத்து
கொத்து கறி - அரை கிலோ
எண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி
டால்டா - ஒரு தேக்கரண்டி
பட்டை - இரண்டு இன்ச் அளவு ஒன்று
பெரிய வெங்காயம் - ஐந்து
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இராண்டு மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை - கால் கட்டு
புதினா - கொஞ்சம்
பச்சை மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
முட்டை - நான்கு
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி (முட்டைக்கு)
உப்பு - கொஞ்சம் (முட்டைக்கு)
பால் - கால் டம்ளர்
செய்முறை:
இடியாப்பத்தை பால் தெளித்து உதிர்த்து வைக்கவும்.
எண்ணெயும், டால்டாவும் ஊற்றி காய வைத்து பட்டையை போட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி, புதினா, தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து கடைசியில் கீமாவை போட்டு வதக்கி பத்து நிமிடம் வேக விடவும்.
பிறகு முட்டையில் மிளகு, உப்பு சேர்த்து அடித்து கலக்கி வெந்து கொண்டிருக்கும் கீமாவுடன் ஊற்றி அடிப்பிடிக்காமால் தோசை பிரட்டுவது போல் கிளறவும்.
பிறகு உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை போட்டு மீண்டும் நல்ல மிக்ஸ் பண்ணி இறக்கி பரிமாறவும்.
சுவையான இடியாப்ப கொத்து கறி பிரியாணி ரெடி.