இஞ்சி பூண்டு பேஸ்ட்
தேவையான பொருட்கள்:
இஞ்சி - ஒரு கிலோ
பூண்டு - அரை கிலோ
எண்ணெய் (அ) வினிகர் (அ) உப்பு - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் பூண்டை ஒரு கவரில் போட்டு சுத்தி அல்லது சின்ன குழவியால் இடித்து கொள்ளுங்கள். பிறகு குப்பை கொட்டும் இடத்தில் வைத்து லேசா புடைத்தால் அவ்வளவு பூண்டு குப்பையும் அதில் போய் விடும் இல்லை என்றால் வீடு முழுவதும் பூண்டு குப்பைதான்..
இஞ்சி தோலை சீவி விட்டு பிறகு மண் போக கழுவி பிறகு பொடியாக நறுக்கவும்.
பூண்டையும் நறுக்கி கழுவி கொள்ளுங்கள்.
இப்போது இரண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைத்தெடுத்து அதில் உப்பு அல்லது வினிகர் அல்லது எண்ணெய் கலந்து (நல்ல கலக்கி)பாதியை ஒரு கன்டெயினரில் போட்டு ஃப்ரீஜரில் வைத்து விடுங்கள். ஃப்ரீசரில் வைக்கும் போது முழுவதும் அடைத்து வைக்காதீர்கள். வெடித்து வெளியே வந்துவிடும்.
மீதியை கீழே ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் தேவைக்கு பயன்படுத்தலாம்.