ஆலு கேப்ஸிகம் மசாலா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆலு (உருளை) - ஒன்று பெரியது

கேப்ஸிகம் - மூன்று

காஷ்மீரி சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - கால் கப்

டொமேட்டோ பேஸ்ட் - ஒன்றரை மேசைக்கரண்டி

டொமேட்டோ கெட்சப் - ஒரு மேசைக்கரண்டி

வெங்காயம் - இரண்டு

செய்முறை:

ஆலுவை தோல் சீவி சதுர துண்டுகளாக வெட்டவும். அதே போல் கேப்ஸிகமையும் வெட்டி வைக்கவும்.

வெங்காயத்தையும் பெரிய துண்டுகளாக ஆறாக வெட்டவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முக்கால் பாகம் எண்ணெய் ஊற்றி ஆலுவை நன்கு வறுத்து எடுக்கவும்.

அதே எண்ணெயோடு மீதி எண்ணெயும் சேர்த்து பெரியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சதுரமாக வெட்டிய கேப்ஸிகமையும் போட்டு வதக்கவும்.

பிறகு சில்லிபவுடர், உப்பு தூள் சேர்த்து வதக்கி டொமேட்டோ பேஸ்டையும் சேர்த்து வதக்கவும்.

தனியாக வறுத்து வைத்துள்ள ஆலுவையும் சேர்த்து பிரட்டி கெட்சப் சேர்த்து இறக்கவும்.

சுவையான வித்தியாசமான டிஷ். சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

குறிப்புகள்: