ஆந்திரா பிரியாணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - அரை கிலோ

மட்டன் - 3/4 கிலோ

வெங்காயம் - அரை கிலோ

தக்காளி - 300 கிராம்

பச்சை மிளகாய் - 100 கிராம்

ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா 2

தயிர் - 300 மில்லி

இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி

மல்லிக்கீரை - 2 கட்டு

எலுமிச்சைப்பழம் - பாதி

பாதாம் தூள் - ஒரு மேசைக்கரண்டி

மிளகாய்தூள் - ஒரு மேசைக்கரண்டி

மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிறிய தேக்கரண்டி

கேசர் கலர் பவுடர் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 150 மில்லி

நெய் - 100 மில்லி

உப்பு - 3 தேக்கரண்டி

செய்முறை:

கறியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அத்துடன் பொடியாக நறுக்கிய 50 கிராம் பச்சை மிளகாய், தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிரட்டி சுமார் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயும், நெய்யும் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தில் மூன்றில் ஒரு பங்கை பொன்னிறமாக (தீயாமல்) பொரித்து எடுத்துக்கொண்டு, மீதி 50 கிராம் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி, பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

அதே எண்ணெயில் மீதி வெங்காயம், ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு போட்டு முறுக ஆரம்பிக்கும்போது வெட்டிய தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு பிரட்டி வைத்துள்ள கறியைக்கொட்டி வேக வைக்கவும். வெந்தவுடன் அத்துடன் பாதாம் தூள், நைசாக நறுக்கி வைத்துள்ள மல்லிக்கீரை தூவி, எலுமிச்சைப்பழச்சாறு ஊற்றவும்.

அரிசியை பதமாக வடித்துக்கொட்டி, கலர் பவுடரை ஒரு ஸ்பூன் தண்ணீரில் கரைத்து அரிசி மேல் தெளித்து, பொரித்த வெங்காயம், பச்சை மிளகாயை அதன் மேல் தூவி தம்மில் போடவும்.

குறிப்புகள்: