ஆத்தூர் மிளகு கறி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - அரை கிலோ

வெங்காயம் - ஒன்று

தக்காளி - இரண்டு

மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

அரைக்க:

------------------

மிளகு - ஒரு மேசைக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - இரண்டு

முழு தனியா - ஒரு தேக்கரண்டி

பட்டை - ஒரு அங்குல துண்டு

கிராம்பு - மூன்று

ஏலம் - ஒன்று

தேங்காய் - ஒரு பத்தை

முந்திரி - ஐந்து

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பூண்டு - மூன்று ஐந்து பற்கள்

தாளிக்க:

---------------

எண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - ஐந்து

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - பத்து இதழ்

கொத்தமல்லித்தழை - சிறிது (கடைசியில் மேலே தூவ)

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து அதில் அதை மஞ்சள் தூள், உப்பு தூள், வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி போட்டு நன்கு பிசைந்து வைக்கவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை முதலில் தண்ணீர் ஊற்றாமல் திரித்து பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து மட்டனில் சேர்க்கவும்.

கலந்து வைத்த மட்டன் கலவையை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ஊறிய மட்டன் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி தீயை ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.

பிறகு குக்கரிலோ அல்லது வெளியிலோ நன்கு வேகவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: