ஆட்டு தலை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு தலை - ஒன்று

பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டிரண்டு

வெங்காயம் - ஐந்து

இஞ்சி பூண்டு பேஸ்ட் - நான்கு தேக்கரண்டி

கொத்தமல்லி புதினா - அரை கட்டு

பச்சை மிளகாய் - நான்கு

மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி

தனியா தூள் - மூன்று தேக்கரண்டி

தக்காளி - நான்கு

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கத்திரிக்காய் - கால் கிலோ

தேங்காய் - அரை மூடி (அரைத்து பால் எடுத்து கொள்ளவும்)

எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டு தலை சுத்தம் செய்து வாங்கி வரவும். அதில் நிறைய நொறுக்கு எலும்பு இருக்கும்.

அதில் உள்ள நாக்கை தனியாக எடுத்து அதை கொதிக்கிற வெந்நீரில் போட்டு தோலை பிரித் தெடுக்கவும்.

இப்போது நன்கு கழுவி எடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.

தனியாக எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கொத்தமல்லி புதினா, பச்சை மிளகாய், தூள் வகைகள் அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு கிளறவும். தீயை ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.

தலை வெந்ததும் அதில் மேலேடு ஊற்றவும் குக்கரிலிருந்து குக்கர் அடியில் எலும்பு துணுக்குகள் தங்கும் அதை தூர போடவும்.

கடைசியில் தேங்காய பால் ஊற்றி கொதிக்க வீட்டு கத்திரிக்காயை நறுக்கி போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இது உடம்புக்கு ரொம்ப நல்லது. இதில் தக்குடி(கொழுக்கட்டை) போட்டால் நன்றாக இருக்கும்.