ஆட்டு குடல் மிளகு கூட்டு
தேவையான பொருட்கள்:
ஆட்டு குடல் - அரை ஆட்டு குடல்
தக்காளி - இரண்டு
வெங்காயம் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
-----------------------------
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஏலம் - ஒன்று
இலவங்கம் - இரண்டு
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - அரை மேசைக்கரண்டி
சோம்பு - கால் மேசைக்கரண்டி
தாளிக்க:
---------------
வறுத்து செய்த பொடி
கொத்தமல்லி தழை - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
குடலை நன்றாக மஞ்சள் தூள் போட்டு கழுவி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ஐந்து டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து பத்து நிமிடம் மீடியம் தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வைத்து வேக விடவும்.
வெந்து ஆவி அடங்கியதும் அது தண்ணீரோடு தான் இருக்கும். தண்ணீரை வற்றவிட வேண்டும்.
வற்றியவுடன் பெரிய இரும்பு கடாய் (அ) வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து பொடி செய்த பொடியை போட்டு இந்த குடலை போட்டு இரண்டு, மூன்று முறை கிளறி மூடி போடவும்.
நல்ல இதே மாதிரி இரண்டு மூன்று தடவை கிளறி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.