ஆட்டு குடல் தக்காளி கூட்டு (போட்டி)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு குடல் - அரை ஆட்டு குடல்

பட்டை - ஒரு இன்ச் அளவு மூன்றாக ஒடித்து வைக்கவும்

வெங்காயம் - பெரியது ஒன்று

தக்காளி - பெரியது மூன்று

பச்சை மிளகாய் - மூன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று மேசைக்கரண்டி

கொத்தமல்லி - கால் கட்டு

மிளகாய் தூள் - மூன்று தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தயிர் - இரண்டு மேசைக்கரண்டி

ரெட் கலர் - 1 பின்ச்

எண்ணெய் - நான்கு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குடலை நன்றாக கழுவி மஞ்சள் தூள் கொஞ்சம், உப்பு போட்டு இருபத்தைந்து நிமிடம் வேக விடவும்.

பெரிய இரும்பு வாணலியை காயவைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பட்டை போட்டு வெடித்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு போட்டு நல்ல வதக்கி கொத்தமல்லி போடவும்.

பிறகு பொடியாக அரிந்த தக்காளி, இரண்டாக ஒடித்த பச்சை மிளகாய் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும்.

நல்ல வதங்கியவுடன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், ரெட் கலர் போட்டு தயிரையும் ஊற்றி வதக்கி வேக வைத்து வைத்திருக்கும் குடலை போட்டு நல்ல பிரட்டவும். நல்ல தண்ணீர் வற்றி கூட்டு போல் ஆகும் வரை கிளறவும். பிரட்டி மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: