ஆட்டு குடல் சால்னா (போட்டி குருமா)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஆட்டு குடல் சால்னா (போட்டி குருமா ) - முழுது ஒன்று

வெங்காயம் - ஐந்து (பெரியது)

தக்காளி - நான்கு (பெரியது)

பச்சை மிளகாய் - 4

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 5 மேசைக்கரண்டி

கொத்தமல்லி - கால் கட்டு

புதினா - சிறிது

மிளகாய் தூள் - இரண்டரை தேக்கரண்டி

தனியா தூள் - இரண்டரை மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தேங்காய் - அரை முடி

பட்டை, லவங்கம், ஏலம் - தலா இரண்டு

கத்திரிக்காய் - அரை கிலோ

கடலைப்பருப்பு - கால் கப்

எண்ணெய் - 5 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குடலை மஞ்சள் தூள் கொஞ்சம் வினிகர் போட்டு, நன்றாக பத்து நிமிடம் ஊற வைத்து அதில் உள்ள அழுக்கை தேய்த்து கழுவவும். கிளீன் ஆன குடல் கிடைத்தால் பிரச்சனை இல்லை.

சட்டியை காயவைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை, லவங்கம், ஏலம் போட்டு அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அத்துடன் குடலையும் போட்டு நல்ல பிரட்டவும். பிரட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.

அதற்கு ஏற்றாற் போல தண்ணீர் ஆறு அல்லது ஏழு கப் ஊற்றி அரை மணி நேரம் குக்கரில் வேக விடவும். கடலைப்பருப்பை அந்த குக்கரிலேயே ஐந்து நிமிடம் ஊற வைத்து ஒரு சிறிய டப்பியில் மூடி போட்டு வெயிட்டையும் போட்டு வேக விடவும்.

வெந்து குக்கர் சவுண்டு அடங்கியதும் அதில் உள்ளே வைத்திருக்கும் கடலைப்பருப்பை லேசாக நசுக்கி போடவும்.

போட்டு கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயையும் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு கத்திரிக்காய் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: