ஆட்டு கறி குழம்பு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஆட்டுக் கறி - 1/2 கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 2 இணுக்கு

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மல்டி பர்பஸ் கறி மசாலா பொடி - 2 தேக்கரண்டி

தேங்காய் - 1/2 மூடி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

ஏலக்காய் - 2

பட்டை - 2

கிராம்பு - 2

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறியை கழுவி அதில் மல்டி பர்பஸ் மசாலா பொடி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு,கீ றிய பச்சை மிளகாய், பாதி அளவு நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய் பட்டை தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம் போடவும்.

வெங்காயம் வதங்கியதும் மிளகாய்தூள் போடவும்.

கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் தக்காளி போட்டு வதக்கவும்.

பின் பிரட்டி வைத்த கறியை சேர்த்து கிளறவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வெயிட் வைக்கவும்.

2 விசில் வந்ததும் திறந்து அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மூடி மீண்டும் ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.

பின் இறக்கி மல்லிதழை தூவி பறிமாறவும்.

குறிப்புகள்: